கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

உடலிலுள்ள வாயுவை வெளியேற்ற உதவும் அருமருந்து!

உடம்பிலுள்ள வாயுவையும், உடம்பு வலியையும் குணப்படுத்தும் அருமருந்தாகும் இது.

News image
Updated On :17 செப்டம்பர் 2022, 11:34 am

தினமணி


தேவையான பொருட்கள்

சித்தரத்தை.     - 5 கிராம்

சுக்கு                  -  5 கிராம்

மிளகு.               -  5 கிராம்

திப்பிலி.            -  5 கிராம்

அக்கரகாரம்.    -  5  கிராம்

பனைவெல்லம்   -  தேவையான அளவு

மஞ்சள் தூள்.    -  2 சிட்டிகை

செய்முறை

சித்தரத்தை , சுக்கு , மிளகு , திப்பிலி , அக்கரகாரம் ஆகியவற்றை சசுத்தப் படுத்தி  நன்கு இடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 750 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில்   இடித்து வைத்துள்ள பொருட்களையும் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு பனைவெல்லத்தையும் போட்டு  நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதிக்க வைத்து  150 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி இறக்கி வடிகட்டி  குடிக்கவும்

பயன்கள்

இந்தக் கசாயம்  உடம்பிலுள்ள வாயுவையும், உடம்பு வலியையும் குணப்படுத்த உதவும் அருமருந்தாகும்.

இந்த கசாயத்தை தயார் செய்து காலை , மாலை என இரண்டு வேளையும் அல்லது ஒரு வேளையாகவோ குடித்து வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

-கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.