அடையாறு புற்றுநோய் அறக்கட்டளைக்கு நிதி உதவும்பொருட்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் மெட்ரோப்ளக்ஸ் தமிழ் சங்கம் விமரிசையாக இன்னிசை விருந்துடன் தீபாவளி கொண்டாடப்பட்டது.
தமிழ் பள்ளி குழந்தைகளின் தமிழ்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. அனைவரையும் ராஜன் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். வாழ்த்துரையை சங்க தலைவர் ராம்கி இராமகிருஷ்ணன் நல்கினார்.
இதனைத் தொடர்ந்து பிரபல பாடகர் பிரபு மற்றும் அவரது 12பேர் அடங்கிய குழுவினரின் இன்னிசைக்கச்சேரி இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நிகழ்த்தி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினர். துணைத்தலைவர் சயானி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முனைப்போடு பங்காற்றிய அனைவருக்கும் நினைவுப்பரிசுகளை வழங்கிப்பாராட்டினார்.
சங்க செயற்குழு உறுப்பினர் முத்து தலைமையில் தன்னார்வலர்கள் சிற்றுண்டி வழங்கி வருகையாளர்களுக்கு சிறுபசி தீர்த்தனர். சங்கர் மற்றும் தன்னார்வலர்கள் இரவு தீபாவளிச் சிறப்பு உணவு வழங்கும் ஏற்பாடுகளை திறம்படச் செய்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஒளி,ஒலி ஏற்பாடுகளை வெங்கி மற்றும் செளந்தர் தலைமையில் தன்னார்வலர்கள் எவ்வித இடர்பாடுமின்றி நிகழ்ச்சிகள் நிகழ துணைபுரிந்தனர். சங்கப்பொருளாளர் சேரன் நிகழ்வுகளை நிழற்படங்கள் எடுத்து உதவினார். 350 பேர்களுக்கு மேல் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சங்க இணைச் செயலர் கிளாட் வெல் நன்றி நவில தீபாவளி விழா இனிதே நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








