தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை இன்று சந்தித்து செஸ் வீரர் பிரக்ஞானந்தா வாழ்த்துப் பெற்றார். அப்போது பிரக்ஞானந்தாவுடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடினார். நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன், வின்சென்ட் கெய்மர் போன்ற ஜாம்பவான்கள் கலந்துகொண்டனர். இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார் பிரக்ஞானந்தா.
இதைத்தொடர்ந்து நார்வே செஸ் பட்டம் வென்ற தமிழக வீரர் ஆர். பிரக்ஞானந்தாவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். நார்வே செஸ் தொடரில் முன்னணி வீரரான கார்ல்செனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா இரண்டு முறை வீழ்த்தி அசந்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
CM Vijay played chess with Tamil Nadu chess player Praggnanandhaa.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

பிரக்ஞானந்தாவால் இந்தியாவுக்குப் பெருமை: பிரதமர் மோடி, அமித் ஷா பாராட்டு!

பிரக்ஞானந்தா நம்பமுடியாத ஒரு போராளி..! கார்ல்சென் புகழாரம்!

பிரக்ஞானந்தா வரலாற்றுச் சாதனை! நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay




