தெலங்கானாவுக்கு ஆதரவாக பாஜக தீர்மானம்

குவாஹாட்டி, ஜன. 8: தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்க வகைசெய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி குவாஹாட்டியில் நடைபெறும் பாஜக செயற்குழு கூட்டத்தில் சனிக்கிழமை தீர்மான
Updated on
1 min read

குவாஹாட்டி, ஜன. 8: தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்க வகைசெய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி குவாஹாட்டியில் நடைபெறும் பாஜக செயற்குழு கூட்டத்தில் சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 நிர்வாக காரணங்களுக்காக சிறிய மாநிலங்களை உருவாக்குவது அவசியம், இதன் மூலம் அந்தப் பிராந்தியத்தின் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படும். ஆனால், தெலங்கானா மாநிலத்தை உருவாக்குவதில் மத்திய அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை தனி தெலங்கானா விவகாரத்தை திசை திருப்புவதாக உள்ளது என்றும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com