ரூ.1 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
புணே, ஜன.8: ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய மத்திய சுங்க அதிகாரி சனிக்கிழமை கையும் களவுமாக பிடிபட்டார். இரும்பு ஆலை நடத்தும் தொழிலதிபர் ஒருவரிடமிருந்து ரூ.1கோடி லஞ்சம் கேட்டார் மத்திய சுங்க அதிகாரி கே


புணே, ஜன.8: ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய மத்திய சுங்க அதிகாரி சனிக்கிழமை கையும் களவுமாக பிடிபட்டார்.
இரும்பு ஆலை நடத்தும் தொழிலதிபர் ஒருவரிடமிருந்து ரூ.1கோடி லஞ்சம் கேட்டார் மத்திய சுங்க அதிகாரி கே.பி.மஹாதிக் என்பவர். இந்த விஷயம் குறித்து அறிந்த சி.பி.ஐ. அவரைக் கண்காணித்து வந்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொழிலதிபரிடமிருந்து மஹாதிக் பணம் பெறும்போது மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மேலும் இவர் வீட்டில் நடத்திய சோதனையின்போது ரூ.6.8 லட்சம் ரொக்கம், 800 அமெரிக்க டாலர்கள் (ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.40,000), ஒரு கைத்துப்பாக்கி, பல நிலபேர விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...