தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம்: அகிலேஷ் தொடங்கினார்

உத்தரப்பிரதேசத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் அகிலேஷ் திங்கள்கிழமை

News image
Updated On :11 மார்ச் 2013, 7:48 pm

உத்தரப்பிரதேசத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் அகிலேஷ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

பள்ளிக்கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது.

தொடக்கவிழாவில் இது தொடர்பாக அகிலேஷ் பேசியதாவது: சொல் ஒன்று, செயல் ஒன்று என சமாஜவாதிக் கட்சி செயல்படாது. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளோம். ஆங்கிலமும், லேப்டாப்பும் மாணவர்களுக்கு அவசியம். இந்தத் திட்டங்களை தொடங்குவதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

லேப்டாப் வழங்குவதை எதிர்க்கட்சிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தன. அதைவிட மாணவர்கள் கூடுதல் ஆவலுடன் காத்திருந்தனர். லேப்டாப்பும், இணையதளமும் மாற்றங்களை ஏற்படுத்தும். இணையதள அடிப்படையில் கல்வியை நாங்கள் போதிக்கவில்லை என்று எதிர்கால உலகம் எங்கள் மீது பழிசுமத்தாது. இணையதளத்தின் மூலம் புதிய உலகில் கால்பதிக்கும் மாணவர்கள், கல்வியின் பலனை அடைவார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.