இலங்கை அதிபர் ராஜபட்ச, மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆஸ்ரமம் மீது தந்தை பெரியார் தி.க.வினர் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசை ஆதரிக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கண்டிக்கும் வகையில், மேற்கு வங்க மாநிலத்தவர் அதிகம் வழிபடும் அரவிந்தர் ஆசிரமத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
போராட்டத்துக்கு, மாநிலத் தலைவர் வீரமோகன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் ம.இளங்கோ, செயலர் சே.சுரேஷ், இளைஞரணித் தலைவர் ச.தீனா, பொருளாளர் இரா.பாலமுருகன், கிராமப்புற மக்கள் இயக்கத் தலைவர் உழவாய்க்கால் சந்திரசேகரன், தமிழர் தேசிய இயக்க நிர்வாகி இரா.அழகிரி, புரட்சி ஜனசக்தி நிர்வாகி புரட்சிவேந்தன், பூரான்கள் இயக்கத் தலைவர் போன்ஸ் ரமேஷ், ஜெ.வாஞ்சிநாதன், நகரத் தலைவர் சு.காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, திடீரென ஆசிரமத்துக்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்த பூந்தொட்டிகள், கண்ணாடி ஜன்னல்கள், நாற்காலிகள் போன்றவற்றை அடித்து உடைத்தனர். மேலும், நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரம சின்னத்தையும் சேதப்படுத்தினர்.
தகவலறிந்துவந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
இவர்கள் புதன்கிழமை மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமி அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். 2-வது நாள் போராட்டமாக ஆசிரமத்தைத் தாக்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெல் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

வீண்போகாத ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை..! ஆட்ட நாயகன் விருது வென்ற புலம்பெயர்ந்த வீரர்!

தொடர் வெற்றிகள்... நூறு சாமியிலும் அசத்துவாரா ஸ்வாசிகா?

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


