சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது எனக்கூறிய மத்திய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா விவகாரத்தில் அக்கட்சியின் நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
முலாயம் சிங்குக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என அமைச்சர் வேணி பிரசாத் வர்மா கூறினார். மத்திய அரசில் இருந்து கூட்டணி கட்சியான திமுக வெளியேறியுள்ள நிலையில் 22 எம்.பி.க்களைக் கொண்ட சமாஜவாதி கட்சி வெளியில் இருந்து தரும் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானதாகும். மத்திய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா பேச்சால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரும் வேணி பிரசாத் வர்மாவைக் கண்டித்தனர்.
இதையடுத்து இப்பிரச்சனையில் மென்மையான போக்கை கடைபிடிக்க சமாஜவாதி கட்சி தீர்மானித்துள்ளது.
இப்பிரச்சினையால் மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. நிதி மசோதா, குற்றவியல் நடைமுறைச் சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு தரப்படும் என முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!

உலகக் கோப்பையின் முதல் திருட்டு: ஹைதி தோல்விக்கு ஃபிஃபாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


