மத்திய அமைச்சர் வேணி பிரசாத் போதைப்பொருள்களை கடத்துகிறார் என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் சிவ்பால் யாதவ் கூறிய புகார் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பா.ஜ.க. கோரியுள்ளது.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் விஜய் பகதூர் பாதக் திங்கள்கிழமை கூறியதாவது:
மத்திய அமைச்சர் வேணி பிரசாத் மீது மாநிலத்தின் மூத்த அமைச்சர் சிவ்பால் யாதவ் புகார்களை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியும், சமாஜவாதி கட்சியும் அரசியல் நாகரீகத்தை குழிதோண்டி புதைத்து விட்டன.
மகாத்மா காந்தி, ராம் மனோகர் லோகியா பெயரில் அரசியல் நடத்தும் இரு கட்சிகளும் இதன் மூலம் என்ன சாதிக்கப் போகின்றன? இரு கட்சியினரும் மாறி மாறி புகார்களை கூறி வருவது அரசியலுக்கே இழுக்
காகும். பயங்கரவாதிகளுடன் முலாயம் சிங் யாதவுக்கு தொடர்பு உள்ளது என்ற மத்திய அமைச்சர் வேணி பிரசாத்தின் புகார் தொடர்பாகவும் உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்றார் பாதக்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாலூா், ஆப்பூா் குறுவட்ட ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு

தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கியவா் பிரதமா் மோடி! பாஜக மாநில துணைத் தலைவா்
ஓமன் துறைமுகத்தில் பலியான தூத்துக்குடியைச் சேர்ந்த மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கை: இந்திய தூதரகம்!

ஒலிபெருக்கி அமைத்தவா் தவறி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


