தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

வேணி பிரசாத் மீதான புகாரை விசாரிக்க பா.ஜ.க. கோரிக்கை

மத்திய அமைச்சர் வேணி பிரசாத் போதைப்பொருள்களை கடத்துகிறார் என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர்

Updated On :2 ஏப்ரல் 2013, 1:01 am IST

மத்திய அமைச்சர் வேணி பிரசாத் போதைப்பொருள்களை கடத்துகிறார் என்று சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் சிவ்பால் யாதவ் கூறிய புகார் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பா.ஜ.க. கோரியுள்ளது.

இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் விஜய் பகதூர் பாதக் திங்கள்கிழமை கூறியதாவது:

மத்திய அமைச்சர் வேணி பிரசாத் மீது மாநிலத்தின் மூத்த அமைச்சர் சிவ்பால் யாதவ் புகார்களை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியும், சமாஜவாதி கட்சியும் அரசியல் நாகரீகத்தை குழிதோண்டி புதைத்து விட்டன.

மகாத்மா காந்தி, ராம் மனோகர் லோகியா பெயரில் அரசியல் நடத்தும் இரு கட்சிகளும் இதன் மூலம் என்ன சாதிக்கப் போகின்றன?  இரு கட்சியினரும் மாறி மாறி புகார்களை கூறி வருவது அரசியலுக்கே இழுக்

காகும். பயங்கரவாதிகளுடன் முலாயம் சிங் யாதவுக்கு தொடர்பு உள்ளது என்ற மத்திய அமைச்சர் வேணி பிரசாத்தின் புகார் தொடர்பாகவும் உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்றார் பாதக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.