ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

மேற்கு தொடர்ச்சி மலை குறித்த அறிக்கை மீது 3 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயம் உத்தரவு

சுற்றுச்சூழல் ரீதியாக மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் குறித்து அறிவதற்காக அமைக்கப்பட்ட காட்கில் குழுவின் அறிக்கை குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் 3 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2013, 5:37 pm

சுற்றுச்சூழல் ரீதியாக மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் குறித்து அறிவதற்காக அமைக்கப்பட்ட காட்கில் குழுவின் அறிக்கை குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் 3 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை குறித்து ஆய்வு செய்ய காட்கில் கமிட்டி அமைக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நிபுணர் குழு என அறியப்பட்ட இக்குழு தனது அறிக்கையை 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளித்தது. அந்த மலைத் தொடர் முழுவதும் சுற்றுச் சூழல் ரீதியாக மிகவும் நுட்பமானது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை மீதான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படாததால், அப்பகுதியில் எந்த கட்டுமானம் மற்றும் வளர்ச்சி திட்டங்களையும் மேற்கொள்ள முடியவில்லை என கேரளம் தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தில் முறையிட்டது.

இதை தொடர்ந்து, காட்கில் குழுவின் அறிக்கை அல்லது இது தொடர்பாக அமைத்த வேறு ஏதாவது குழுவின் அறிக்கை குறித்து மத்திய சுற்றுச்சூழல்-வனத் துறை அமைச்சகம் மூன்று வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டுமென தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ஸ்வதந்தர் குமார் உத்தரவிட்டார். மூன்று வார கெடுவுக்குள் அமைச்சகத்தின் முடிவை தீர்ப்பாயத்தின் முன்பு சமர்ப்பிக்க வேண்டுமென அவர் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், காட்கில் கமிட்டியின் அறிக்கை குறித்து இறுதி முடிவெடுக்க அமைக்கப்பட்ட செயற்குழுவின் காலத்தை ஏப்ரல் 15 வரை மத்திய சுற்றுச்சூழல்-வனத் துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. திட்டக்குழு உறுப்பினரும் இஸ்ரோ முன்னாள் தலைவருமான கே.கஸ்தூரிரங்கன் இந்த செயற்குழுவின் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டுமென்றும் அங்கு எந்த புதிய திட்டமும் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் காட்கில் கமிட்டி அறிக்கையை விரைவில் செயல்படுத்த வேண்டுமெனவும் கோரி, கேரளம், கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆசிய யானை, புலி உள்ளிட்ட பல உயிரினங்களின் வாழ்விடமாக மேற்கு தொடர்ச்சி மலை உள்ளதால் இப்பகுதியை பாதுகாப்பது அவசியம் என அவர்கள் கூறியுள்ளனர்.

காட்கில் குழு, சுற்றுச்சூழல் ரீதியாக மேற்கு தொடர்ச்சி மலையை மூன்று வகையாகப் பிரித்துள்ளது. கோவாவில் எந்த சுரங்க நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் புதிய சுரங்க உரிமம் வழங்கப்படக் கூடாதெனவும் தற்போதுள்ள உரிமங்களை ஐந்து ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கூறியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டுமெனவும் காட்கில் அறிக்கை தெரிவிக்கிறது.

தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தில் இந்த விவகாரம் குறித்த அடுத்த விசாரணை ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.