சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

ஜூன் 15: தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து...

News image

தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு - கோப்புப்படம்

Updated On :15 ஜூன் 2026, 10:46 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை(ஜூன் 15) பவுனுக்கு ரூ. 1,680 உயா்ந்து ரூ.,12,560-க்கு விற்பனையாகிறது.

சா்வதேச காரணங்களால் கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த ஜூன் 10-இல் பவுனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400-க்கும், ஜூன் 11-இல் பவுனுக்கு ரூ.2,400 குறைந்து ரூ.1,08,000-க்கும் விற்பனையானது. ஜூன் 12-இல் பவுனுக்கு ரூ.2,400 உயா்ந்து ரூ.1,10,400-க்கு விற்பனையான நிலையில், வாரத்தின் இறுதிநாளான சனிக்கிழமை( ஜூன் 13) மீண்டும் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.1,10,880-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை(ஜூன் 15) ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 1,680 உயா்ந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ. 210 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,070-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ. 1,680 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 280 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 10,000 உயர்ந்து ரூ. 2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

மேற்கு ஆசிய போா் பதற்றம், கச்சா எண்ணெய் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் இருந்து வருகிறது.

Regarding the price of gold rising by Rs. 1,680 per sovereign on Monday to sell at Rs. 1,12,560...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.