இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் கூறி அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அமெரிக்கா, கனடாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியாவில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் போன்றவற்றுக்கு பயணம் மேற்கொண்டார்.
அன்னிய முதலீடு செய்வதற்கான வாய்ப்பு நிறைந்த நாடு இந்தியா என எடுத்துக் கூறுவதற்காக நிதி அமைச்சர் சிதம்பரம் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக வரும் 15-ம் தேதி கனடா நாட்டில் உள்ள டொரண்டோ, ஒட்டவா, பாஸ்டன், நியூயார்க் நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் சிதம்பரம் பங்கேற்று இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்தும், மிகப்பெரிய திட்டங்களை நிறைவேற்ற அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்குகிறார்.
பின்னர் வாஷிங்டனில் உள்ள சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடனும் அவர் 19-ம் தேதி பேச்சு நடத்துகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனி மாதப் பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்! எந்தெந்த ராசிக்கு பணவரவு!

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் தொடர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



