மக்கள்தொகை மற்றும் வளர்ச்சிக்கான ஆசிய பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் (ஏஎஃப்பிபிசி) தலைவராக மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் ஒருமனதாக வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
பாங்காங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏஎஃப்பிபிசி-ன் 73ஆவது செயற்குழுக் கூட்டத்தில் குரியன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது, ஏஎஃப்பிபிசி-ன் தலைவராக ஜப்பானின் முன்னாள் பிரதமர் யாஸýவோ ஃபுகுடா உள்ளார். அவரைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவராக குரியன் பதவியேற்பார்.
பிராந்திய நாடுகளின் அரசுசாரா அமைப்பான ஏஎஃப்பிபிசி 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் 25 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு உள்ளது. இந்தக் குழு, பிராந்திய நாடுகளின் பல்வேறு பிரச்னைகள், வளர்ச்சி உள்ளிட்டன குறித்து கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏஎஃப்பிபிசி-ன் செயல்பாடுகளுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.
மக்கள்தொகை மற்றும் வளர்ச்சிக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்துக்கு தலைவராக குரியன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி: மக்கள் அச்சம்

தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி தினகரன்
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


