கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-உதகை சாலை பகுதியில் உள்ள கடைக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி, அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானை கூட்டங்களோடு சேராமல் தனியாக நடமாடி வரும் கம்பீரத் தோற்றம் கொண்ட காட்டு யானை பாகுபலி, இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி போக்குவரத்து மிகுந்த சாலை மற்றும் குடியிருப்புகள் வழியாக கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் உதககை சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை, ஞாயிற்றுக்கிழமை இரவு உதகை சாலையில் உள்ள கடைக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் காட்டு யானை பாகுபலியை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
யானைகளின் வலசைப் பாதையில் வியாபார நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு மற்றும் பொதுமக்களின் இடையூறு காரணமாக யானைகள் தங்களது வழக்கமான வலசை பாதையில் செல்வது தடைபட்டுள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Summary
Wild elephant Baahubali enters residential area near Mettupalayam; residents fearful
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் நுழைந்த காட்டு யானைகள்

தாளவாடி மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு

ஆசனூா் மலைப் பகுதியில் செயல்படும் தங்கும் விடுதிக்குள் நுழைந்த யானை! கிராம மக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சம்!

தாளவாடி அருகே ஊருக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகள் விரட்டியடிப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




