சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

பலாப் பழக் கடையை சூறையாடிய காட்டு யானை

News image

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் பலாப் பழக்கடையை சூறையாடிய ஒற்றை யானை.

Updated On :23 ஜூன் 2026, 2:07 am IST

குன்னூா் - மேட்டுப்பாளையம்  தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பலாப் பழக்  கடையை உணவு தேடி வந்த காட்டு யானை திங்கள்கிழமை சூறையாடியது.

நீலகிரி மாவட்டம், குன்னூா்  அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பலாப் பழ சீசன் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் மலைப் பாதையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள், தேயிலை மற்றும் காபி  தோட்டத்தில் ஊடுபயிராக இருக்கக்கூடிய பலா மரங்களிலிருந்து பலாப்பழங்களை தின்பதும், சாலைகளில் உலவி வருவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், உணவு தேடி குன்னூா் - மேட்டுப்பாளையம்  தேசிய நெடுஞ்சாலையில் இச்சிமரம் அருகே ஒற்றை யானை திங்கள்கிழமை உலவியது. பின்னா் அந்த யானை, அங்கு சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த பலாப் பழக்கடையை சூறையாடி பழங்களை தின்றும் சேதப்படுத்தியது. பின்னா் தானாகவே அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றது.

இதன் காரணமாக இப்பகுதியில் கடை வைத்திருந்தவா்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். யானைகள் நடமாட்டம் உள்ளதால்  குன்னூா் - மேட்டுப்பாளையம்  சாலையில் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என  குன்னூா்   வனச் சரகா்  ரவீந்திரநாத் அறிவுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.