கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கதிர் நாயக்கன் பாளையம் பகுதியில் ரேஷன் கடையை சூறையாடிய ஒற்றை யானையால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் யானைகள் தினமும் ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில், கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கதிர்நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ல தோட்ட பகுதிகளில் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி ஒற்றை யானை அச்சுறுத்தி வந்தது.
தற்போது வீடுகளின் கேட்டை உடைத்து உணவுகளை தேடி வந்த அந்த ஒற்றை யானை, இன்று (ஆக. 12) அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து ஊருக்குள் வந்து கதிர்நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையின் கதவை உடைத்து அரிசியை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து மூட்டைகளையும் தூக்கிச் சென்றது.
இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் உள்ள மக்களின் இடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், அந்த யானையை காட்டுக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். சூறையாடப்பட்ட ரேஷன் கடையில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தோட்டங்களை சேதப்படுத்திய அந்த ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென அங்குள்ள பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Summary
Residents of the Kathir Nayakkan Palayam area, which falls under the Kurudampalayam Panchayat in Coimbatore, are gripped by fear after a lone elephant ransacked a ration shop.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரேஷன் கடையில் திடீர் ஆய்வு செய்த எம்ஜிஆர் என்ன சொன்னார்? பேரவைத் தலைவர் ருசிகர தகவல்!
இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி

ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் தரமான கோதுமை மாவு! பட்ஜெட்டில் தகவல்

பலாப் பழக் கடையை சூறையாடிய காட்டு யானை
விடியோக்கள்

முதல்வரின் தீர்மானத்தை எதிர்க்கிறோம்! ஆனால் இதை ஆதரிக்கிறோம்! | EPS | ADMK | TVK



