பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

குன்னூா் அருகே காட்டேரி பகுதியில் உலவிய காட்டு யானைகளால் அச்சம்

குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதிகளில் புதன்கிழமை காட்டு யானைகள் உலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

காட்டேரி பூங்கா அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் உலவிய யானைகள்.

Published On :

குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதிகளில் புதன்கிழமை காட்டு யானைகள் உலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சமவெளிப் பகுதிகளில் இருந்து மலைப் பாதைக்கு வரும் காட்டு யானைகள், பலாப்பழங்களை உண்பதற்காக குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருகின்றன.

இந்நிலையில், குன்னூா்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற காட்டேரி பூங்கா மற்றும் அதை ஒட்டியுள்ள தேயிலை எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புதன்கிழமை காட்டு யானைகள் கூட்டம் புகுந்தது. இவை பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு சாலைகளிலும், வீடுகளுக்கு அருகிலும் உலவுகின்றன.

அதேபோல தேயிலைத் தோட்டப் பாதைகளிலும் உலவுவதால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளா்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குகூட வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்தில் உள்ளனா். யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.