அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!
/

பாகுபலி - 3 உருவாகிறதா? நடிகர் பிரபாஸ் சொன்னது என்ன?

பாகுபலி 3-ஆம் பாகம் குறித்து நடிகர் பிரபாஸ் கூறியது பற்றி...

News image

பாகுபலி படப்பிடிப்பில் ராஜமௌலி மற்றும் பிரபாஸ் - கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 12:33 pm IST

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் மூன்றாவது பாகம் உருவாகுகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா உள்ளிட்டோரின் நடிப்பில் 2015-ல் வெளியான படம் பாகுபலி. பான் இந்தியா படமாக வெளியான பாகுபலி, உலகெங்கிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதன் தொடர்ச்சியான அடுத்த பாகமாக பாகுபலி - 2, அடுத்த 2 ஆண்டுகளில் 2017-ல் வெளியானது. இவ்விரு படங்களும் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வதாய் அமைந்தன.

இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் சுமார் 5 ஆண்டுகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இரு படங்களையும் ஒன்றிணைத்து, பாகுபலி - தி எபிக் என்ற பெயரில் 2025-ல் திரையரங்குகளில் வெளியிட்டனர்.

இந்த நிலையில், பாகுபலி படப்பிடிப்புகளில் நடந்த அனுபவங்கள், படப்பிடிப்புச் சவால்கள் குறித்து படக்குழுவினர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஓர் ஆவணத் தொடரும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த தொடரில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி கலந்துகொண்டு பேசினர்.

இந்த நிகழ்ச்சியின்போது, "இந்த உலகம் இன்னும் அதற்குத் தயாராக இல்லை. ஆனால், பாகுபலி..." என்று ராணா டகுபதி கூறினார்.

இதனைத் தொடர்ந்து, பிரபாஸ் தன்னுடைய கைகளில் 3 விரல்களை உயர்த்துவது போலவும், ராணாவும் அனுஷ்காவும் அவரைத் தடுப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பாகுபலியின் பாரம்பரியம் தொடரும் என்றும் நிகழ்ச்சியின் முடிவில் காட்டப்படுகிறது.

இதன் மூலம் பாகுபலி படத்தின் 3-ஆம் பாகம் உருவாகுகிறதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இயக்குநர் ராஜமௌலி தற்போது மகேஷ்பாபுவின் வாரணாசி படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Is Baahubali Part 3 on making?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.