மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தில்லி போலீஸôர் போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறியதால் அவர் தாக்குதலுக்கு உள்ளானார் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் திக் விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
திட்டக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை தில்லி சென்ற மம்தா மற்றும் மாநில அமைச்சர்கள் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல் தொடுத்தனர். இதற்கு மம்தா கடும் கண்டனம் தெரிவித்தார். அத்துடன், தில்லியில் கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள ரத்து செய்து விட்டு, மாநிலம் திரும்பினார்.
இந்நிலையில், இச்சம்பவத்துக்கு மாநில போலீஸôரே காரணம் என்று பிடிஐ செய்தியாளரிடம் திக் விஜய்சிங் வியாழக்கிழமை தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
திட்டக் குழு அலுவலகத்தில் மம்தா மீது தாக்குதல் நடத்திருப்பது துரதிருஷ்டவசமானது. அவர், ஒரு மாநில முதல்வர். அதற்கு ஏற்ப தகுந்த பாதுகாப்புகளை வழங்கியிருக்க வேண்டும். அதனால், இச்சம்பவத்துக்கு தில்லி போலீஸôரே பொறுப்பு என்று திக் விஜய்சிங் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
கச்சா எண்ணெய் விலை 5% சரிவு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிஅமலாக்கத் துறையில் ஆஜர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



