மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசுத் தலைவருக்கு மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கடிதம் எழுதி உள்ளார்.
புது தில்லியில் முதல்வர் மம்தா பானர்ஜி, நிதி அமைச்சர் அமித் மித்ரா ஆகியோர் இடது சாரி மாணவர் அமைப்புகளால் தாக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சி பொலிட் பீரோ மன்னிப்பு கோர வேண்டும் என மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் கருத்து தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அக்கட்சியின் பொதுச் செயலர் காரத் எழுதிய கடிதம்: தில்லி சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி பொலிட் பீரோ மன்னிப்பு கோர வேண்டும் என மாநில ஆளுநர் கூறியது நியாயமானதா? இது அரசியல் தலையீடு.
ஆளுநர் எம்.கே. நாராயணன் வெளியிட்ட கருத்து அவரது பதவிக்கு அழகல்ல. தேவையற்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியினர், அலுவலகங்களை இலக்கு வைத்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆளுநரின் கருத்து வன்முறையாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடைபெற்றது என அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை தருகிறது. அரசமைப்பு சட்ட பதவி வகித்து வரும் அவர்,
ஒரு கட்சி ஜனநாயக ரீதியாக செயல்பட தகுதியற்றது எனக் கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது.
குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக செயல்படும் ஆளுநர் எம்.கே.நாராயணன் வெளியிட்ட கருத்து குறித்து ஆய்வு செய்து அவருக்கு நீங்கள் உரிய அறிவுறை வழங்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளார் காரத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனி மாதப் பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்! எந்தெந்த ராசிக்கு பணவரவு!

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் தொடர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



