/

லஞ்சம்: மும்பையில் 36 போலீஸார் இடைநீக்கம்

லஞ்சம் வாங்கியதாக மும்பையில் 36 போலீஸார் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On :11 ஏப்ரல் 2013, 7:08 pm

லஞ்சம் வாங்கியதாக மும்பையில் 36 போலீஸார் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மார்ச் 9 முதல் 26ம் தேதி வரையிலான காலத்தில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பாக எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக போலீஸாருக்கு கட்டட உரிமையாளர்கள் லஞ்சம் கொடுத்துள்ளனர். இதை சமூக நல ஆர்வலர் காசிம் கான் என்பவர் ரகசியமாக கேமராவில் பதிவு செய்துள்ளார். குர்லா பகுதியில் உள்ள நேரு நகர் பகுதியின் பல்வேறு இடங்களில் போலீஸார் லஞ்சம் வாங்கும்போது, தான் வைத்திருந்த விடியோ கேமரா மூலம் ரகசியமாக பதிவு செய்த கான், அதை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

இதையடுத்து 36 போலீஸாரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட மும்பை காவல் ஆணையர் சத்யபால் சிங், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு மூலம் மேலும் விசாரிக்கப்படும் என்றார்.

வாங்க விருப்பம் இல்லாத போலீஸாரையும் ஆசைகாட்டி பொதுமக்களே லஞ்சத்தை திணிக்கின்றனர் என்றே தான் கருதுவதாக ஆணையர் சிங் தெரிவித்தார்.

கேமராவில் பதிவாகியுள்ள படத்தை பார்க்கும்போது பொதுமக்கள்தான் போலீஸாருக்கு லஞ்சத்தை திணிப்பது தெரியவருகிறது.

எனினும் லஞ்சம் வாங்குவது தலைகுனிவான செயல்தான். போலீஸார் லஞ்சம் வாங்கினால் அதை சகித்துக்கொண்டிருக்க மாட்டோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சிங்.

லஞ்சம் வாங்கியதாக சஸ்பெண்ட் ஆனவர்களில் சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் சிலரும் அடங்குவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.