2 ஜி கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பார்தி நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல் மற்றும் எஸ்ஸôர் நிறுவன மேம்பாட்டாளர் ரவி ரூயா ஆகியோர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரானார்கள்.
பார்தி செல்லுலார் லிமிடெட், ஹட்சின்சன் மேக்ஸ் டெலிகாம், ஸ்டெர்லிங் செல்லுலார் லிமிடெட், உள்ளிட்ட மூன்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூடுதல் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதில் அரசுக்கு ரூ.846 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
சுனில் மிட்டல், ரவி ரூயா, அசிம் கோஷ் மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புத் செயலாளர் சியாமள் கோஷ் உள்ளிட்டோருக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இவர்கள் பெயர் இல்லை.
எனினும் நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்ததால் அவர்களுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
தங்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை எதிர்த்து சுனில் மிட்டல், ரவி ரூயா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஏப்ரல் 16-ம் தேதி வரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இவர்கள் மனுக்கள் மீதான விசாரணை ஏப்ரல் 15-ம் தேதி நடைபெறுகிறது.
கனடா வாழ் இந்தியரான அசிம் கோஷுக்கு சம்மனை அனுப்ப முடியவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி ஏப்ரல் 16-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனி மாதப் பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்! எந்தெந்த ராசிக்கு பணவரவு!

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் தொடர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


