எல்லையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியாவுக்கு உரிமை உண்டு என பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறியுள்ளார்.
லடாக் எல்லையில் சீன ஊடுருவல் சம்பவம் நடைபெற்று முடிந்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவாவில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படைத் தளத்தில் மிக்-29 கே ரக விமானங்களை கடற்படையில் இணைக்கும் விழாவின் போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நமது எல்லைப் பகுதியில் ராணுவம் மற்றும் விமானப்படை, கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தும். ஒவ்வொரு நாட்டுக்கும் தங்கள் எல்லையில் தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்ய உரிமை உண்டு.
அத்தகைய வசதிகளை மேற்கொள்ள சீனாவுக்கு உரிமை இருக்கும் போது இந்தியாவுக்கும் அதே உரிமை உள்ளது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணி பல்வேறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்றார்.
சுமர் பகுதியில் பதுங்கு குழிகளை இந்தியா அகற்றி விட்டதா எனக் கேட்ட போது அவர் கூறியது: இப்பிரச்னை குறித்து விவாதங்கள் முடிந்து விட்டன. அதை செயல்படுத்தும் பணி அப்பகுதியில் உள்ள இரு நாட்டு ராணுவ கமாண்டர்களிடம் உள்ளது.
அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தூதரக ரீதியில் தீர்வு காணலாம் என இந்தியா நம்புகிறது. இதற்கான தெளிவான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
சீன ஊடுருவல் நிகழாமல் தடுப்பதில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதா எனக் கேட்டபோது அவர் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழ்ந்தால் அதுவரை உள்ள நிலையையே பராமரிக்க இரு தரப்பும் தீர்மானித்துள்ளன.
எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்காக ராணுவ அதிகாரி ஒருவரும் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் பெய்ஜிங் சென்றிருந்தார் என்றார் அந்தோனி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா்

13 ஆவணங்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

