தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

அத்வானியுடனான சந்திப்பு மன நிறைவை அளிக்கிறது: நரேந்திர மோடி

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியுடனான சந்திப்பு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 மே 2013, 3:26 am IST

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியுடனான சந்திப்பு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் ஆட்சி மன்றக் குழுவில் முதல்முறையாக கலந்துகொண்ட மோடி அது குறித்து தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருப்பதாவது:

பாஜக ஆட்சி மன்றக் குழுவில் பங்கேற்ற மூத்த தலைவர் அத்வானியைச் சந்தித்து 40 நிமிடங்கள் உரையாடியது மிகவும் மன நிறைவைத் தருகிறது. மேலும் பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது பல விஷயங்கள் குறித்து விவாதித்தோம் என குறிப்பிட்டிருக்கிறார்.

நரேந்திர மோடிக்கும் அத்வானிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அத்வானியுடனான சந்திப்பு மன நிறைவை  அளித்திருப்பதாக மோடி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.