சீனா, இந்தியாவின் ஒருங்கிணைந்த குரலுக்கு உலகம் கட்டுப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று சீனப் பிரதமர் லீ கெகியாங் பேசினார்.
3 நாள் பயணமாக இந்தியா வந்த லீ கெகியாங் பயணத்தின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை, தில்லியில் தொழிலதிபர்கள் மத்தியில் பேசினார். அப்போது நமஸ்தே (வணக்கம்) இந்தியா என்று அவர் தனது பேச்சை தொடங்கினார்.
"எல்லைப் பிரச்னை உள்பட நம்மிடையே நிலவும் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்துக் கொள்ளும் அளவுக்கு இருநாடுகளுக்கும் தெளிவான சிந்தனை உள்ளது. நதி நீர் பிரச்னை, வர்த்தக ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்னைகள் குறித்து திறந்த மனதுடன் பேச்சு நடத்த சீனா தயாராகவே உள்ளது' என்றார்.
"தொலைவில் இருக்கும் உறவினர்களை விட, அண்டை வீட்டுக்காரர்களே அதிகம் உதவுவார்கள்' என்ற சீன பழமொழியை நினைவுகூர்ந்து பேசிய லீ கெகியாங், "இந்தியாவுடன் சிறப்பான உறவைப் பேண சீனா விரும்புகிறது. கடந்த இருநாள்களில் இரு முறை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினேன். இந்த சந்திப்புகள் இனிமையானதாகவும், இரு தரப்புக்கும் பயனளிப்பதாகவும், திருப்திகரமாகவும் இருந்தது. இரு தரப்புக்கும் இடையே உள்ள அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் பேசியுள்ளோம் என்றார்.
27 ஆண்டுகளுக்கு முன்பு இளம் தலைவராக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டதையும் லீ கெகியாங் நினைவூகூர்ந்தார். சீனாவும், இந்தியாவும் ஒருங்கிணைந்து ஒரே குரலில் பேசினால், உலகமே அதனைக் கேட்க வேண்டிய நிலை ஏற்படும். எல்லைப் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடர ஒப்புக் கொண்டுள்ளோம். இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு விரைவில் அமையும். இந்தியா - சீனா இடையே தனிப்பட்ட முறையில் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள பேச்சு நடைபெற்று வருகிறது.
இந்தியாவிடமும், சீனாவிடமும் மிகப்பெரிய சந்தையும், மிகப்பெரிய உற்பத்தி வளமும் உள்ளன.
முக்கியமாக தகவல் தொழில்நுட்பம், மென்பொருள், உயிரி மருத்துவம் ஆகிய துறைகளில் இந்தியா சிறப்பாக உள்ளது. இந்தியாவில் உள்கட்டுமான மேம்பாட்டுக்கு சீனா உதவும்.
2012-13-ல் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி ரூ.74,360 கோடியாக உள்ளது. அதே நேரத்தில் சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வது ரூ.2,98,650 கோடியாக உள்ளது.
இதனால் இந்தியாவுக்கு ரூ.2,24,290 கோடி வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்தக ஏற்றத்தாழ்வு குறித்த இந்தியாவின் கவலையை சீனா பரிசீலிக்கும். தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவுவது இருநாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமானது.
சீனா - இந்தியா இடையே அமைதி நிலவுவது சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. வானில் ஏற்படும் மேகக் கூட்டங்களால் சூரிய கதிர்களை மறைத்துவிட முடியாது.
அதுபோன்றதுதான் சீனா, இந்தியாவின் நட்புறவு. உலக மக்கள்தொகையில் 3-ல் ஒரு பங்கை நாம் கொண்டுள்ளோம். எனவே சீனா - இந்தியா இடையே உள்ள நல்லறவு என்பது உலகுக்கே மிக முக்கியமானது என்று லீ கெகியாங் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்

குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு: தினப்பலன்கள்!
தொடரும் ஜனநாயகப் பின்னடைவு!

திமுகவினா் கூப்பன் விநியோக வழக்குப் பதிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


