ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

பின்னணிப் பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் ஹரிஹரனுக்கு கெüரவமிக்க லதா மங்கேஷ்கர் விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :21 மே 2013, 9:19 pm

பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் ஹரிஹரனுக்கு கெüரவமிக்க லதா மங்கேஷ்கர் விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தேசிய அளவில் இசைத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில், மத்தியப் பிரதேச அரசு 1984-ஆம் ஆண்டு முதல் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.

இந்த ஆண்டு அந்த விருது பின்னணிப் பாடகர் ஹரிஹரனுக்கு வழங்கப்பட்டது. மத்தியப் பிரதேச கலாசாரத்துறை அமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா மற்றும் தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்ஜியா ஆகியோர் இந்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் இந்த விருதை ஹரிஹரனுக்கு வழங்கினர். விருதுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை, சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட்டன.

பிரபல பாடகரான ஹரிகரன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, போஜ்புரி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த பாடகருக்காக இரண்டு முறை தேசிய விருது பெற்ற ஹரிஹரனுக்கு மத்திய அரசு 2004-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது.

இசைத்துறையில் கெüரவமிக்கதாகக் கருதப்படும் லதா மங்கேஷ்கர் விருதைப் பெறும் 28-ஆவது கலைஞர் ஹரிஹரன் ஆவார். இதற்கு முன்பு இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர்கள் ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.