ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

புதிய சி.ஏ.ஜி.யாக சசிகாந்த் சர்மா நியமனம்

மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா புதிய தலைமை கணக்குத் தணிக்கையாளராக (சி.ஏ.ஜி.) நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :21 மே 2013, 9:32 pm

மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா புதிய தலைமை கணக்குத் தணிக்கையாளராக (சி.ஏ.ஜி.) நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐந்தரை ஆண்டுகளாக இப்பதவியை வகித்து வந்த வினோத் ராய் புதன்கிழமை ஓய்வு பெறுகிறார். அவரது பதவிக்காலத்தில் 2ஜி அலைக்கற்றை, நிலக்கரிச் சுரங்க முறைகேடு உள்ளிட்டவை தொடர்பான தணிக்கை அறிக்கைகளால் சி.ஏ.ஜி. அமைப்புக்கும் மத்திய அரசுக்கும் பல முறை மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மாவை புதிய தலைமை கணக்குத் தணிக்கையாளராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 61 வயதாகும் சசிகாந்த் சர்மா, பிகார் மாநிலத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.

பிரிட்டனின் யார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம்பெற்றுள்ளார். அவர் சிஏஜியாக 23ஆம் தேதி (வியாழக்கிழமை) பதவியேற்க உள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். வினோத் ராயைப் போலவே சசிகாந்த் சர்மாவும் மத்திய நிதிச்சேவைத் துறையில் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். அவர் பாதுகாப்புத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேஜரிவால் கட்சி எதிர்ப்பு: இதனிடையே, சசிகாந்த் சர்மாவை புதிய சி.ஏ.ஜி.யாக மத்திய அரசு நியமித்துள்ளதற்கு அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  ""சி.ஏ.ஜி. என்ற முறையில் அவர் 2003ஆம் ஆண்டுக்கும் 2010ஆம் ஆண்டுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் நடந்த கொள்முதல்கள் குறித்தும் தணிக்கை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், அந்தக் காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவில் அவர் அதிகாரியாகப் பணியாற்றியதால், சி.ஏ.ஜி. பணியை அவர் கவனிப்பது முரண்பாடாக இருக்கும்'' என்று வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.