தில்லி முத்தமிழ்ப் பேரவை, தில்லித் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து தலைநகரில் மூன்று நாள்கள் நடத்தும் "பக்தி மற்றும் இசை விழா' வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், வேளுக்குடி கிருஷ்ணனின் பகவத் கீதை குறித்த ஆன்மிகச் சொற்பொழிவை ஏராளமான தில்லிவாழ் தமிழர்கள் மிகவும் ஆர்வத்துடன் கேட்டனர்.
தில்லித் தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கனகா சுதாகர் நிர்த்திய பாரதி அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் ஷப்னா, ஆர்த்தி நாயர், அஸ்வதி நாயர், ரம்யா கண்ணன், அபிலாஷா, ராசி செüத்ரி, தீக்ஷிதா வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்ற பரத நாட்டியம் நடைபெற்றது.
கலைஞர்களுக்கு "தினமணி' ஆசிரியர் கே. வைத்திநாதன் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார். முன்னதாக, வேளுக்குடி கிருஷ்ணனுக்கு தில்லி முத்தமிழ்ப் பேரவைத் தலைவர் கே.வி.கே. பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமை உரையாற்றினார். தில்லி முத்தமிழ்ப் பேரவைப் பொதுச் செயலர் என். கண்ணன் வரவேற்புரையாற்றினார். கிருத்திகா ராஜராஜன் இறைவணக்கம் பாடினார்.
நிகழ்ச்சியை தில்லி முத்தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் கா. உலகநாதன் தொகுத்து வழங்கினார். தில்லித் தமிழ்ச் சங்க இணைச் செயலர் பெ. ராகவன் நாயுடு, தில்லி முத்தமிழ்ப் பேரவைப் பொருளாளர் ராஜராஜன், இணைப் பொருளாளர் சந்தானம், தில்லித் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ரமாமணி சுந்தர் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தொடர்ந்து வேளுக்குடி கிருஷ்ணனின் "ஸ்ரீ பகவத் கீதாசாரம்' என்ற தலைப்பில் பக்திச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த ஆன்மிக தொடர் சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

