மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நக்சல் தாக்குதலில் பாஜக சதியா? காங்கிரஸ் விளக்கம் தர வேண்டும்: ஆர்எஸ்எஸ்

சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜக தலைவர்களின் சதி உள்ளது என்ற குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் விளக்கமளிக்க வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது.

Updated On :1 ஜூன் 2013, 6:39 pm

சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜக தலைவர்களின் சதி உள்ளது என்ற குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் விளக்கமளிக்க வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் மீது மாவோயிஸ்டுகள் கடந்த வாரம் நிகழ்த்திய தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். நாட்டையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தின் பின்னணியில் பாஜக தலைவர்களின் சதி உள்ளது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இதனைக் கண்டித்து ஆர்எஸ்எஸ் பத்திரிகையான "ஆர்கனைசர்' கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், "பாஜக மீது குற்றம்சாட்டுவதற்கு முன்பு காங்கிரஸார் தங்கள் கட்சியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். சத்தீஸ்கரில் காங்கிரஸ் உள்ளூர் தலைவர்கள் பலர், தேர்தல் ஆதாயத்துக்காக நக்சல்களுடன் கைகோத்தனர். நக்சல் தாக்குதல் சம்பவத்துக்கு முன்பு, நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், பங்கேற்காதவர்கள், காலதாமதமாக வந்தவர்கள், முன்னதாகவே சென்றுவிட்டவர்கள் குறித்து அக்கட்சி விசாரித்தால் நக்சல் தாக்குதல் சதியில் யார் உள்ளார்கள் என்பது தெரியும். பாஜக தலைவர்கள் மீது காங்கிரஸ் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டும். நக்சல் பிரச்னையைத் தீர்க்க வழி தெரியாமல், அவர்கள் நடத்திய தாக்குதலை வைத்து அரசியல் ஆதாயம்

அடைய காங்கிரஸ் முயற்சிக்கிறது.

நக்சல்களுக்கு பணம், பொருள்கள் கொடுத்து உதவி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸின் குற்றச்சாட்டு பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி வதந்திகளின் உற்பத்தி மையமாகவும், சதிகளின் பிறப்பிடமாகவும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.