மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலா ஆகியோர் தில்லி திகார் சிறையில் இருந்து செவ்வாய்க்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களுடன் கைது செய்யப்பட்ட அங்கீத் சவாண் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை எனவே அவர் விடுவிக்கப்படவில்லை.
சிறையில் வெளியே வந்த ஸ்ரீசாந்த், தில்லியில் தனது வழக்குரைஞரின் இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: நடந்து முடிந்த சம்பவங்களை நான் மறக்க விரும்பவில்லை. இது எனக்கு பல பாடங்களைக் கற்றுத்தந்துள்ளது. உண்மையான உத்வேகத்துடன்தான் நான் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றேன். எனது மனதையும், ஆன்மாவையும் கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்துள்ளேன் என்றார்.
உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் என்ன செய்யவீர்கள் என்ற கேள்விக்கு, "இந்திய நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது' என்று ஸ்ரீசாந்த் பதிலளித்தார்.
ஜாமீன் கிடைத்தபின் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். கடவுளின் கருணை எனக்கு உள்ளது. சோதனைக் காலத்தில் எனக்கு ஆதரவளித்த ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், வழக்குரைஞர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்ரீசாந்த் கூறினார்.
ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலா, அங்கீத் சவாண் ஆகியோர் மே 16-ம் தேதி தில்லி போலீஸôரால் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
மறுவரையறை மசோதா தோல்வியின் கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கது: அமித் ஷா

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


