வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வெள்ள அபாயம் குறித்த மசோதாவுக்கு மாநிலங்கள் எதிர்ப்பு

உத்தரகண்டில் கடும் வெள்ளம் ஏற்பட்டு பொருள் சேதம், உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள சேதங்களை தவிர்க்க மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள ஒரு மசோதாவுக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Updated On :22 ஜூன் 2013, 12:55 am IST

உத்தரகண்டில் கடும் வெள்ளம் ஏற்பட்டு பொருள் சேதம், உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ள சேதங்களை தவிர்க்க மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள ஒரு மசோதாவுக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மத்திய நீர் ஆணையம் 1975-ஆம் ஆண்டு உருவாக்கிய வரைவு மசோதா இது என்பது குறிப்பிடத் தக்கது. வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளை அகற்ற இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

ஆனால் பிகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. வரைவு மசோதாவுக்கு சில மாநிலங்கள் தங்களது கருத்துக்களைக் கூட தெரிவிக்கவில்லை.

புது தில்லியில் வெள்ளிக்கிழமை இது குறித்து மத்திய நீர் வள அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தது:

குடியிருப்புகளை அகற்றிய பின்பு அங்குள்ள மக்களின் மறுவாழ்வுக்கு திட்டமிடுவது மிகவும் கடினம் என்பது அவர்களது வாதம்.

வெள்ள அபாய பகுதிகளை கையகப்படுத்தி மக்களை மீள்குடியிருப்பு செய்வது போன்ற நடைமுறைகளை மிகச் சரியாக மாநில அரசுகள் செய்து முடிக்காவிட்டால் மத்திய அரசிடமிருந்து அதற்கான நிதி உதவி கிடைப்பதில் சிக்கல்கள் எழலாம் என்றும் மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இப்போது பல தாழ்வான பகுதிகள் வர்த்தக ரீதியாக மேம்படுத்தப்பட்டு பயன்படுகிறது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் அப்பகுதிகளில் பொருள் சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது மாநில அரசின் கடமையாகிறது. அந்த இடங்களில் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு நஷ்ட ஈடு கோர முடியாது என்று மாநிலங்களுக்குத் தெரியும்.

வெள்ள அபாயம் ஏற்பட சாத்தியக் கூறு இருக்கும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை அகற்றிவிட்டு, அந்த இடங்களில் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்டவற்றை அமைக்க இந்த மசோதா வகை செய்கிறது என்று அந்த அதிகாரி கூறினார்.

மத்திய நீர் வளத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவத் சமீபத்தில் நடைபெற்ற கங்கை வெள்ளத் தடுப்பு வாரியத்தின் கூட்டம் ஒன்றில் பேசியபோது, இந்த வரைவு மசோதாவில் குறிப்பிட்டிருக்கும் பல பிரிவுகள் மிகவும் பழமையானவை என்றார். அவற்றை மறுபரிசீலனை செய்து, மீண்டும் ஒரு புதிய வரைவு மசோதாவை உருவாக்கி மாநிலங்களின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டியுள்ளது என்று கூறியிருக்கிறார்.

வெள்ள அபாயத் தடுப்பு தொடர்பாக, மணிப்பூர் மாநிலம் 1978-ஆம் ஆண்டு ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ஆனால் வெள்ள அபாய இடங்கள் எவை என்பதை அந்த மாநிலம் இன்னும் வரையறை செய்யவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

ராஜஸ்தானிலும் இது தொடர்பான சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றபோதிலும் அங்கு இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.