மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்ய வேண்டியது அவசியம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், "புதிய பிகார் - நிர்வாகம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தல்' என்ற நூலின் பிரதியை நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென் வெளியிட, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெற்றுக் கொண்டார். பின்னர் பிரணாப் பேசியதாவது:
அனைத்து மாநிலங்களும் மாறுபட்ட அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும், ஒரே மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஏழ்மை, பின்தங்கிய நிலை, உள்கட்டமைப்பு வசதி குறைபாடு மற்றும் நோய்த் தாக்குதல் ஆகிய பிரச்னைகள் அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளன. வளர்ச்சித் திட்டங்கள் இத்தகைய சவால்களை திறமையாகக் கையாள்வதை அடிப்படை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
மேற்கண்ட பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டுமானால், மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் முறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவரும் கூடி ஆலோசித்து புதிய நடைமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வழியானது வழக்கமான சட்ட நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டதாகவும் அனைவரும் ஏற்கத்தக்கதாகவும் இருக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


