நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தெலங்கானா தனி மாநிலம் தொடங்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படாது என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தத் தொடரிலேயே மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று பாஜக புதன்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், "தெலங்கானா தொடர்பான மசோதா மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. அடுத்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம். வழக்கமாக புதிய மாநிலங்களை உருவாக்கும்போது, அதிகபட்சம் 9 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளப்படும். தெலங்கானா விஷயத்தில் 6 மாதங்கள் அல்லது அதற்கு முன்னதாகவே முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றார்.
தெலங்கானா விவகாரத்தில் மாநில அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் முடிவு எடுக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறப்படுவது பற்றிய கேள்விக்கு, "இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர சட்டப்பேரவையில் ஏற்கெனவே விவாதம் நடைபெற்றுள்ளது. தெலங்கானா தனி மாநில கோரிக்கை தொடர்பான தீர்மானம் மாநில அரசு சார்பில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி வராதபட்சத்தில் மற்ற வழிகளில் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன்படி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தெலங்கானா மாநிலம் உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்திருப்பது பற்றிய கேள்விக்கு, "தனி மாநிலம் உருவாக்க எடுத்த முடிவில் மாற்றமில்லை. மக்கள் போராட உரிமை உண்டு என்றார்.
புதிய மாநிலம் உருவாக்கும் வழிமுறைகள்: புதிய மாநிலம் அமைப்பது தொடர்பான குறிப்பை உள்துறை அமைச்சகம் தயாரித்து அமைச்சரவைக்கு அளிக்கும். அங்கு ஒப்புதல் கிடைத்தவுடன், இந்த மசோதா தொடர்பாக பரிந்துரை வழங்க மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். அமைச்சரவை ஒப்புதலுக்கு பின்னர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மாநில அரசின் கருத்தைக் கேட்ட பின்னர், இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் வளா்ச்சியில்லை: அண்ணாமலை யாரை சொல்கிறார்..?

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


