/

பாகிஸ்தானுடன் நல்லுறவை விரும்புகிறது இந்தியா

இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட சுஜாதா சிங், அண்டைநாடுகளுடனான நட்புறவை வளர்ப்பதே தனது முதல் பணி எனவும், பாகிஸ்தானுடன் நல்லுறவையே இந்தியா விரும்புகிறது எனவும் தெரிவித்தார்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2013, 9:21 pm

இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட சுஜாதா சிங், அண்டைநாடுகளுடனான நட்புறவை வளர்ப்பதே தனது முதல் பணி எனவும், பாகிஸ்தானுடன் நல்லுறவையே இந்தியா விரும்புகிறது எனவும் தெரிவித்தார்.

புது தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பாகிஸ்தானுடன் ஆக்கபூர்வமான நல்லுறவை வளர்ப்பதே இந்தியாவின் கொள்கையாக இருந்து வருகிறது. அதற்கு வன்முறை, பயங்கரவாதம் ஆகியவை இல்லாத சூழல் அமையவேண்டியது கட்டாயமாகிறது.

2011-ல் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. தற்போது பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்திருக்கிறது. அந்த அரசுடன் விட்ட இடத்திலிருந்து பேச்சுவார்த்தையைத் தொடருவோம்.

அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பதற்கே முக்கியத்தும் கொடுத்து செயல்படவிருக்கிறேன். உலக நாடுகளுடன் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த உறவை வலுப்படுத்துவதே அடுத்த பிரதான நோக்கமாகும்.

இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் ஜெனிவா தீர்மான வரம்பை மீறி மோசமாக நடத்தப்பவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 1999-ல் பாகிஸ்தான் வீரர்களால் கொல்லப்பட்ட கேப்டன் செüரவ் காலியா விவகாரத்தில் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்போது, அவற்றை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்போம். இந்த விவகாரத்தை பாகிஸ்தானிடம் எழுப்புவோம்.

பூடானுடன் நிலவி வரும் சுமுகமான உறவை தொடந்து தக்கவைக்க அந்நாட்டின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அந்நாட்டுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவை நிறுத்தப்பட்டதால் தொழில்நுட்ப ரீதியிலான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை செயலாளராக நான் செல்லும் முதல் நாடு பூடான்தான் என்று சுஜாதா சிங் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.