வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ் 736.38 புள்ளிகள் உயர்ந்து 76,264.33 புள்ளிகளாகவும், நிஃப்டி 231 புள்ளிகள் உயர்ந்து 23,853.90 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

மும்பை பங்குச் சந்தை - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 5:24 pm IST

மும்பை: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான 107 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் சரிவு, உள்ளிட்டவையால் உலகளாவிய பங்குச் சந்தை எழுச்சி பெற்று, தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்டன. இதில் முக்கிய குறியீடான சென்செக்ஸ் இன்றயை வர்த்தக முடிவில் 736 புள்ளிகள் உயர்ந்து நிறைவு செய்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,293.12 புள்ளிகள் அதிகரித்து 76,821.07 புள்ளிகளாகவும், நிஃப்டி 388.5 புள்ளிகள் உயர்ந்து 24,011.40 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 736.38 புள்ளிகள் உயர்ந்து 76,264.33 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 231 புள்ளிகள் உயர்ந்து 23,853.90 புள்ளிகளாக நிலைபெற்றது.

அமெரிக்காவும் ஈரானும் தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை எடுத்துச் செல்லப் பயன்படும் குறுகிய நீர்வழியான 'ஹோர்முஸ் நீரிணை' மீண்டும் திறப்பதற்கும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ஒப்பந்தத்தை இறுதி செய்தன.

இதனையடுத்து, ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிகாரிகள் தெரிவித்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' மீடியாவில் பதிவிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் குறித்த அறிவிப்புக்குப் பிறகு, உலக சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்குக் சரிந்தன.

சென்செக்ஸில் ட்ரெண்ட், இன்டர்குளோப் ஏவியேஷன், பஜாஜ் ஃபின்சர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட், எடர்னல் மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டிரென்ட், எச்டிஎஃப்சி லைஃப், ஐஷர் மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் என்டிபிசி, ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

துறைவாரியாக பார்க்கையில், சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளைத் தவிர, அனைத்து முக்கிய குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. நிஃப்டி-யில் ரியாலிட்டி குறியீடு கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்ந்து சிறப்பாக இயங்கி நிலையில் ஆட்டோ, உலோகம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஆகிய குறியீடுகள் தலா சுமார் 2 சதவீதம் உயர்ந்தன.

நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகள் தலா 1 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தன.

மேற்கு ஆசியாவில் கணிசமான வருவாய் ஈட்டும் முக்கிய உள்கட்டமைப்பு நிறுவனமான 'லார்சன் & டூப்ரோ' நிறுவன பங்குகள் 3.2 சதவீதம் உயர்ந்தன. கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் விளைவாக, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், டயர் மற்றும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி 5 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்த நிலையில், ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு கிட்டத்தட்ட 5 சதவீதம் உயர்ந்தன. ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் உயர்வுடன் நிறைவடைந்தன.

ஐரோப்பாவில் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் வெள்ளிக்கிழமையன்று உயர்ந்து முடிவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ. 1,082.18 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் சரிந்து, பீப்பாய் ஒன்றுக்கு 82.90 அமெரிக்க டாலர் என்ற அளவில் உள்ளது.

Summary

Stock markets rose for the second straight session with Sensex closing higher by 736 points on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.