விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!

சென்செக்ஸ் 715.06 புள்ளிகள் சரிந்து 76,755.05 புள்ளிகளாகவும், நிஃப்டி 191.45 புள்ளிகள் சரிந்து 23,996.25 புள்ளிகளாக நடைபெற்றது.

கோப்புப் படம்

Published On :22 ஜூலை 2026, 5:26 pm IST

மும்பை: கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வங்கிப் பங்குகள் மீதான விற்பனை அழுத்தம் தொடர்ந்ததால், இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்தன.

தொடக்க வர்த்தகத்தில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 403.54 புள்ளிகள் சரிந்து 77,066.06 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 114.75 புள்ளிகள் சரிந்து 24,070.05 புள்ளிகளாக இருந்தது. இதன் மூலம் தொடர்ந்து 3வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 715.06 புள்ளிகள் சரிந்து 76,755.05 புள்ளிகளாகவும், நிஃப்டி 191.45 புள்ளிகள் சரிந்து 23,996.25 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் இன்டர்குளோப் ஏவியேஷன், ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சன் பார்மா, அதானி போர்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி பங்குகளும் சரிந்தும் மறுபுறம் டைட்டன், எடர்னல், மாருதி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

துறைவாரியான குறியீடுகளில், வாகனத் துறை குறியீடு மட்டும் சற்று உயர்ந்த நிலையில், மற்ற அனைத்து நிஃப்டி குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. அதே வேளையில், நிஃப்டி ஸ்மால்கேப் 100 மற்றும் நிஃப்டி மிட்கேப் 100 குறியீடுகள் முறையே 1.02 சதவீதம் மற்றும் 0.79 சதவீதம் சரிந்தன.

நிஃப்டி-யில் மீடியா 2.68% சரிவுடன் மிக மோசமான செயல்பாட்டைப் பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து ரியால்டி -2.6 சதவீதமும், பொதுத்துறை வங்கி -1.8 சதவீதமும், தனியார் வங்கி -1.4 சதவீதமும், ஐடி -1.5 சதவீதமும், வங்கி -1.2 சதவீதமும், பார்மா -1.3 சதவீதமும், நுகர்வோர் பொருட்கள் -0.86 சதவீதமும், உள்கட்டமைப்பு -0.85 சதவீதமும், நிஃப்டி எண்ணெய் மற்றும் எரிவாயு -0.6 சதவீதமும், உலோகம் -0.48 சதவீதம் மற்றும் எரிசக்தி -0.3 சதவீதமும் சரிந்தன.

ஆசியச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 5.16 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 225 மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடும் உயர்ந்தும், ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடுகள் சரிந்தன.

அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயர்வுடன் நிறைவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குபவர்களாக இருந்த நிலையில், முந்தைய வர்த்தகத்திலும் 1,650.16 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

நேற்று டாலருக்கு ரூ. 96.24 ரூபாயாக இருந்த ரூபாயின் மதிப்பு, இன்றைய வர்த்கத்தில் 33 காசுகள் சரிந்து ரூ. 96.57 ஆக நிறைவடைந்தன.

உலகளாவிய ப்ரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 1.15 சதவீதம் உயர்ந்து 92.06 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Benchmark indices Sensex and Nifty declined in early deals on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.