மும்பை: ஏற்ற இறக்கமான வர்த்தக சூழலில், இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் நிறைவடைந்தன. வலுவான நிறுவனங்களின் வருவாய் மற்றும் உறுதித்தன்மை இருந்தபோதிலும், தனியார் வங்கிகளின் பலவீனம் மற்றும் கச்சா எண்ணெய் விலையேற்றம் உள்ளிட்டவை பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்ததால், இன்றைய வர்த்தகத்தில், மந்தமான தொடக்கத்திற்குப் பிறகு, பிற்பகுதியில் பங்குச் சந்தை அழுத்தத்திற்கு உள்ளான நிலையில், நிஃப்டி குறியீடு குறைந்தபட்ச அளவான 24,135.65க்கு சென்றது. இருப்பினும், வர்த்தகத்தின் கடைசி நேரத்தில் ஏற்பட்ட வலுவான கொள்முதலால், குறியீடு தனது சரிவு நிலையிலிருந்து மீண்டு 24,200 என்ற நிலைக்கு அருகில் நிலைபெற உதவியது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 238.41 புள்ளிகள் சரிந்து 77,470.11 புள்ளிகளாகவும், நிஃப்டி 50.80 புள்ளிகள் சரிந்து 24,187.70 புள்ளிகளாக நிலைபெற்றது.
நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.3 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 0.5 சதவீதமும் ஏற்றம் கண்டன.
லாப வரம்பு தொடர்பான காலாண்டு முடிவுகள் ஏமாற்றம் அளித்ததைத் தொடர்ந்து, எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்கின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாகச் சரிவைச் சந்தித்தது.
சென்செக்ஸில் எடர்னல், எச்.டி.எஃப்.சி. வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா மற்றும் மாருதி ஆகிய பங்குகள் சரிந்தும் மறுபுறம் டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி-யில் எச்.டி.எஃப்.சி. வங்கி, டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, டாக்டர் ரெட்டிஸ் லேப் ஆகிய பங்குகள் சரி்ந்தன. மறுபுறம் ஶ்ரீராம் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐச்சர் மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.
துறைவாரியாகப் பார்க்கையில், எஃப்எம்சி ஜி, தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத்துறை வங்கிகள் ஆகியவை 0.3 முதல் 0.8 சதவீதம் வரை சரிந்தன. அதே வேளையில் ஆட்டோமொபைல், உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் 0.6 முதல் 1 சதவீதம் வரை ஏற்றம் கண்டது.
கேப்ரியல் இந்தியா, குஜராத் ஃப்ளோரோகெமிக்கல்ஸ், மணப்புரம் ஃபைனான்ஸ், ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல், அஜந்தா பார்மா, இண்டஸ்இண்ட் வங்கி, லாரஸ் லேப்ஸ், ஃபெடரல் வங்கி, எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், லாயிட்ஸ் மெட்டல்ஸ் & எனர்ஜி, டைட்டன் கம்பெனி, செம்இந்தியா ப்ராஜெக்ட்ஸ், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா, ஷியாம் மெட்டாலிக்ஸ் அண்ட் எனர்ஜி, நவின் ஃப்ளோரின் இன்டர்நேஷனல், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சாய் லைஃப் சயின்சஸ் உள்ளிட்ட 120 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை எட்டியது.
அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 96.45 என்ற முந்தைய நிலையை விட 21 காசுகள் உயர்ந்து ரூ.96.24 ஆக நிலைபெற்றது.
தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 1,121.04 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
உலகளாவிய 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை 0.63 சதவீதம் குறைந்து, பீப்பாய் ஒன்றுக்கு 88.66 டாலராக உள்ளது.
Summary
Indian equity benchmarks ended lower for the second consecutive session on July 21.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!

பங்குச் சந்தை வீழ்ச்சி: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி... சென்செக்ஸ் 370 புள்ளிகள் சரிவு!

கச்சா எண்ணெய் விலை சரிவால் இந்தியப் பங்குச் சந்தை மீட்சி! சென்செக்ஸ் 790 புள்ளிகள் உயர்வு!!








