ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் சில தினங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை அத்துமீறி 7,000 சுற்றுகள் சுட்டுள்ளதோடு, பீரங்கித் தாக்குதலும் நடத்தியது.
இந்நிலையில், ஜம்முவில் எல்லையையொட்டி அமைந்துள்ள ஆல்ஃபா மாஷியல் எல்லைச் சோதனைச் சாவடி மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பவன்குமார் காயமடைந்தார். பாகிஸ்தான் ராணுவத்துக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் உரிய பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே மதியம் 2 மணிவரை துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இத்தகவலை எல்லைப் பாதுகாப்புப் படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஒரு வாரத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து மேற்கொள்ளும் இரண்டாவது போர் நிறுத்த மீறல் இதுவாகும். முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி அமைந்துள்ள நாராயண்பூர் சோதனைச்சாவடி மீது பாகிஸ்தான் படையினர் கடந்த 5ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டனர். இதில் எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலர் ராம்நிவாஸ் மீனா காயமடைந்தார். அவரது மார்பில் தோட்டா பாய்ந்தது. அவர் ஆபத்தான நிலையில் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒமர் அப்துல்லா வலியுறுத்தல்:இந்தியாவுடன் செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஸ்ரீநகரில் கூறுகையில், ""பாகிஸ்தானில் இருந்து நம் நாட்டுக்குள் ஊடுருவலை மேற்கொள்வதற்காகவோ, தங்கள் அரசின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவோ பாகிஸ்தான் தரப்பு இவ்வாறு போர் நிறுத்த மீறல்களில் ஈடுபடுகிறதா என்பதை என்னால் கூற இயலாது. ஆனால், பாகிஸ்தான் இப்படி அத்துமீறுவதை நிறுத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையில் 2003ஆம் ஆண்டு நவம்பரில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை பாகிஸ்தான் பின்பற்ற வேண்டும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |

ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!

இந்த சீசனின் சிறந்த பந்துவீச்சு..! ஜேமி ஓவர்டனுக்கு ஆட்ட நாயகன் விருது தராதது ஏன்?

தவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை


