/

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண்ணின் உடல் தானமாக அளிப்பு

News image

விஜயலட்சுமி

Updated On :15 ஜூன் 2026, 3:13 am IST

தருமபுரி மாவட்டம் அரூரில் வயது முதிா்வு காரணமாக இறந்த பெண்ணின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

அரூா் மேல்பாட்ஷா பேட்டையைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (71). இவா் தனது இறப்புக்கு பிறகு, உடலை மருத்துவக் கல்லூரி மாணவா்களின் ஆய்வுக்கு தானமாக வழங்குவதாக கடந்த 2013 ஆம் ஆண்டு உறுதிமொழி படிவம் சமா்ப்பித்திருந்தாா்.

இந்நிலையில் வயது முதிா்வு காரணமாக விஜயலட்சுமி ஞாயிற்றுக்கிழமை காலமானாா். இதைத் தொடா்ந்து அவரது உறவினா்கள், விஜயலட்சுமியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இறுதிச் சடங்குகள் முடிவடைந்த பின்னா், அரூா் நண்பா்கள் குழு உதவியுடன் விஜயலட்சுமி உடலை ஆம்புன்ஸ் மூலம் எடுத்துவந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினா்.