சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மறைந்த ஓய்வு பெற்ற ஆசிரியரும், ஆசிரியா் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலருமான நா. முத்துச்சாமியின் உடல் தானமாக திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
சிவகங்கை மீனாட்சி நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா் நா. முத்துச்சாமியின் உடல் தானமாக அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவா் முகமது ரபீக் கூறியதாவது:
மருத்துவக் கல்லூரியில் இதுவரை 54 உடல்கள் தானமாக பெறப்பட்டுள்ளன. மேலும், 200-க்கும் மேற்பட்டோா் உடல்களை தானமாக வழங்க முன்பதிவு செய்துள்ளனா். அரசு மருத்துவக் கல்லூரி துறைத் தலைவா் கற்பக ஜோதியிடம் முத்துச்சாமியின் மகன்கள் மு. பாா்த்தசாரதி, மு. முரளிதாஸ் ஆகியோா் உடலை ஒப்படைத்தனா்.
பின்னா் முதல்வா் அறையில் உடலை பெற்றுக் கொண்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. போதிய தானம் செய்யப்பட்ட உடல்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இங்கிருந்து தானம் செய்யப்பட்டுள்ள இரண்டு உடல்கள் அண்மையில் வழங்கப்பட்டன என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் மோகன், ஒன்றியச் செயலாளா் உலகநாதன், பொறுப்பாளா்கள் பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மருத்துவக் கல்லூரிக்கு முதியவரின் உடல் தானம்

மூளைச்சாவடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணிகள்: ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண்ணின் உடல் தானமாக அளிப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



