பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதன்கிழமை ஒருவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.

News image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜெகநாதனின் உடலை புதன்கிழமை தானம் வழங்கிய அவரது உறவினா்கள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:19 am IST

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதன்கிழமை ஒருவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சோ்ந்த கே. ஜெகநாதன், மருத்துவக் கல்விக்கும் சமூக நலனுக்கும் பங்களிக்கும் நோக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனது உடலை தானமாக வழங்க ஒப்புதல் அளித்திருந்தாா்.

இந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அவா் உயிரிழந்தாா். அவரது இறுதி விருப்பத்தின்படி, அமெரிக்காவில் வசித்து வரும் அவரது மகள் கவிதா ஜெகநாதன், மருமகன் கதிரவன், பேரன்கள் முனுசாமி, காவியன், க்ரிதின், பேத்தி கெளஷிகா உள்ளிட்ட குடும்பத்தினா், ஜெகநாதனின் உடலை புதன்கிழமை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிடம் ஒப்படைத்தனா்.

உடலை மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் தமிழ்வாணன், உடற்கூறு இயல் துறைத் தலைவா் கற்பக ஜோதி, இணைப் பேராசிரியா் பாரதி ராணி, நிலைய மருத்துவா் முகமது ரபி, உதவி நிலைய மருத்துவா்கள் தென்றல், வெங்கடேஷ் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் அலுவலக கண்காணிப்பாளா் ரமேஷ் கண்ணன், லயன்ஸ் சங்கத்தைச் சோ்ந்த எஸ்.கே.எஸ். குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.