ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் நிலக்கரி குவியல் சரிந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
மகாநதி நிலக்கரி நிறுவனத்துக்குச் சொந்தமான வசுந்தரா-கர்ஜன்பஹால் சுரங்கப் பகுதியில் இந்த விபத்து சனிக்கிழமை நிகழ்ந்தது. சம்பவத்தன்று, திறந்த வெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நிலக்கரி குவியலில் நிலக்கரி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். திடீரென நிலக்கரி குவியல் சரிந்ததில் அவர்கள் உயிருடன் புதையுண்டனர்.
மீட்புப் பணியில் நிறுவன ஊழியர்களுடன் போலீஸாரும் இணைந்து ஈடுபட்டனர். சனிக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணியில் 10 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை மீட்புப் பணி மீண்டும் தொடங்கியது. அப்போது, மேலும் 4 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றினர்.
அப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக நிலக்கரி குவியல் சரிந்திருக்க வாய்ப்புள்ளது என்று நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை

தந்தையர் நாள்! என்னென்ன பரிசுகள் கொடுக்கலாம்?

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


