குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
/

நக்சலைட்டுகளை ஒடுக்க 2000 முன்னாள் ராணுவத்தினர் தேர்வு

நக்சலைட்டுகள் ஒழிப்பு பணிக்கு வனப்பகுதியில் பணியாற்றிய அனுபவமுடைய 2000 முன்னாள் ராணுவத்தினரை தேர்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 12:16 am IST

நக்சலைட்டுகள் ஒழிப்பு பணிக்கு வனப்பகுதியில் பணியாற்றிய அனுபவமுடைய 2000 முன்னாள் ராணுவத்தினரை தேர்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் மத்திய ரிசர்வ் காவல்படைக்கு அதிக அளவில் முன்னாள் ராணுவத்தினர் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

நக்சலைட்டுகள் ஒழிப்பு பணிக்கு 2037 முன்னாள் ராணுவ வீரர்கள் தேவைப்படுவதாக மத்திய ரிசர்வ் காவல் படை வெளியிட்ட விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் ஜூனியர் அதிகாரிகளாக ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.55000 சம்பளம் என்றும்,அதிகாரியாக இல்லாமல் ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.35000 சம்பளம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக பீரங்கிகள் இயக்குதல்,வெடிகுண்டு அகற்றுதல்,நவீன ஆயுதங்களை இயக்குவது போன்றவற்றில் அனுபவம் உள்ள வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும்,அவர்கள் கடினமான வனப்பகுதியில் உள்ள சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி சிறப்பு ஆலோசனை வழங்கவும் முன்னாள் ராணுவத்தினர் பயன்படுத்தப்படுவார்கள் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நக்சலைட்டு வன்முறை அதிகம் உள்ள மாநிலங்களில் முன்னாள் ராணுவத்தினர் 3 முதல் 5 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

நாடு முழுவதும் நக்சலைட்டுகள் ஒழிப்பு வேட்டையில் இப்போது 85000 மத்திய ரிசர்வ் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.