கள்ள ரூபாய் நோட்டுகளைக் கடத்திய வழக்கில், பிகார் மாநிலத்தின் சம்பரான் மாவட்டத்தில் ஐ.எஸ்.ஐ உளவாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டார்.
பாட்னா மற்றும் முஸாஃபர்பூர் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜமீல் என்கிற புராவை (27) கைது செய்தனர்.
இது குறித்து வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் துணை இயக்குநர் வித்யூத் விகாஸ் கூறியதாவது:
""உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்திலுள்ள புரானா பஜார் பகுதியைச் சேர்ந்த ஜமீல், சீனாவிலிருந்து புது தில்லிக்கு 30 லட்ச ரூபாய் முக மதிப்பு கொண்ட கள்ள ரூபாய் நோட்டுகளை குரியர் மூலம் கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்தவர்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பைச் சேர்ந்த இக்பால் சானா என்கிற ஹஃபீஸ் உத்தரவுப்படி ஜமீல் கள்ள ரூபாய் நோட்டுகளை உத்தரப் பிரதேசம் மற்றும் புது தில்லியில் புழக்கத்தில் விட்டு வந்தார்.
கள்ள நோட்டுகள் பிடிபட்டதையடுத்து அவர் நேபாளம் சென்று தலைமறைவாக இருந்து வந்தார்'' என்றார் வித்யுத் விகாஸ்.
கைது செய்யப்பட்ட ஜமீலை 7 நாள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
மகளிருக்கு இலவச பேருந்து சேவை! கேரள முதல்வர் தொடக்கி வைத்தார்!

ஜூன் 15: தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!

தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


