வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பிரதமர் வேட்பாளராக யாரை வேண்டுமானாலும் பாஜக அறிவிக்கட்டும்

யாரை வேண்டுமானாலும் பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கட்டும், ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை துணை தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறினார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 10:52 pm IST

யாரை வேண்டுமானாலும் பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கட்டும், ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை துணை தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறினார்.

2014 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நிறுத்த அக்கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தை செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் கூட்டி, நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நரேந்தர் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "சிறிய கட்சியானலும், பெரிய கட்சியானலும் பிரதமர் வேட்பாளராக ராமு, சோமு, தாமு என்று யாரை வேண்டுமானலும் அறிவிக்கலாம்.

ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொருத்த வரை துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது என்று சுஷீல் குமார் ஷிண்டே பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.