இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோர் கிர்கிஸ்தானில் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச உள்ளனர்.
அப்போது, இரு நாட்டுப் பிரதமர்களும் நியூயார்க்கில் நடைபெறும் ஐநா சபை கூட்டத்தின்போது பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி அவர்கள் திட்டமிட உள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அண்மைக் காலமாக இரு நாட்டு வீரர்களும் மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இது போன்ற சம்பவங்களைத் தடுக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தரவுப்படி பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீர் தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் வந்து, இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கிர்கிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் வெள்ளிக்கிழமை ஷாங்காய் கூட்டுறவு அமைப்புக் கூட்டத்தில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
அப்போது அவர்கள் தனியாக சந்தித்து, நியூயார்க்கில் நடைபெறும் ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்óகும் இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி திட்டமிடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீர் செவ்வாய்க்கிழமை இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் முளைப்பாரியில் தோ்தல் விழிப்புணா்வு

பெரம்பலூா் தொகுதியில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு: அதிமுக வேட்பாளா் உறுதி

உழவா் சந்தையில் காய்கனிகளில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

இளம்பெண் குத்திக்கொலை: கள்ளக்காதலன் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


