மகாராஷ்டிரத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக ரஜினி பாட்டீல் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்தார்.
இதையடுத்து அவர் வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவி காலியானது. இதன் பதவிக்காலம் வரும் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் வரை உள்ளது. இப்பதவிக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மக்களவை பெண் எம்.பி.யான ரஜினி பாட்டீல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மறைந்த விலாஸ்ராவ் தேஷ்முக் மறைவால் காலியான இடம் என்பதால் தங்கள் தரப்பில் வேட்பாளர் யாரையும் நிறுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சியான சிவசேனை-பா.ஜ.க. கூட்டணியை முதல்வர் பிருத்விராஜ் சவாண் கேட்டுக் கொண்டார். அதை அக்கட்சிகள் ஏற்றுக்
கொண்டன.
இதையடுத்து, மாநிலங்களவை எம்.பி.யாக ரஜினி பாட்டீல் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.