அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கசாப் பாதுகாப்பு செலவு தள்ளுபடி

மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாபின் பாதுகாப்புக்காக இந்தோ திபெத் போலீஸாரைப் பயன்படுத்தியதற்காக மகாராஷ்டிர அரசு வழங்க வேண்டிய ரூ.21 கோடி கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 6:41 pm

தினமணி

மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாபின் பாதுகாப்புக்காக இந்தோ திபெத் போலீஸாரைப் பயன்படுத்தியதற்காக மகாராஷ்டிர அரசு வழங்க வேண்டிய ரூ.21 கோடி கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மும்பை ஆர்தர் சாலை சிறையில் அஜ்மல் கசாப் வைக்கப்பட்டிருந்தபோது நான்கு ஆண்டுகளாக அதற்கு இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீஸார் பாதுகாப்பு வழங்கினர். இதற்கான கட்டணமான ரூ.21 கோடியை மகாராஷ்டிர அரசு செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த மகாராஷ்டிர அரசு இந்தக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி வந்தது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே சனிக்கிழமை மும்பை ஆர்தர் சாலை சிறைக்குச் சென்று அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். மகாராஷ்டிர அரசு வழங்க வேண்டிய ரூ.21 கோடி கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்குப் பதில் அந்தத் தொகையை மாநில அரசு சிறைத்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.