பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தில்லி மாணவி பற்றிய தகவலை வெளியிடக்கோரி மனு

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 23 வயது தில்லி மாணவி பற்றிய தகவல்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கோரி ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 6:37 pm

தினமணி

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 23 வயது தில்லி மாணவி பற்றிய தகவல்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கோரி ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான அமைப்பின் தலைவர் சுவாமி ஓம்ஜி. இவர், தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:÷""பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் தொலைக்காட்சி ஒன்றில் வெள்ளிக்கிழமை பேட்டியளித்துள்ளார். இந்நிலையில், அந்தப் பெண் தொடர்பான விவரங்களை மறைக்கத் தேவையில்லை. அவரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பகிரங்கமாக வெளியிட உத்தரவிட வேண்டும். பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் நகலையும் அனைத்து ஊடகங்களுக்கும் அளிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனு, மாஜிஸ்திரேட் நம்ரிதா அகர்வால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்குரைஞர் ராஜீவ் மோகன் கூறுகையில், ""பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை சட்டப்படி வெளியிட முடியாது. அப்பெண்ணின் நண்பரின் பேட்டியை வெளியிட்டதற்காக, செய்தித் தொலைக்காட்சி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

இதையடுத்து, மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகுமாறு மாஜிஸ்திரேட் நம்ரிதா அகர்வால் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.